Thursday, 22 March 2012

மந்திரம் வேண்டாம் தந்திரம் பழகு ***


உனக்கொரு கடமை எனக்கொரு கடமை
இருக்குது கணக்கினிலே
உருவங்கள் செய்து உயிரினைக் கொண்டு
நடக்குது நாடகமே
உண்மையை வென்று பொய்தனைக் கொன்று
ஆடிடு நாட்டியமே
பூஜைகளாலே ஆசைகளை அடைவதற்கே
மந்திரம்
ஐம்பூதம் நால்வேதம் அறிவது தான்
தந்திரம்
மெய்யும் பொய்யும் புரியவைக்கும் ஆறாம்
அறிவே விஞ்ஞானம்
யோகம் கொண்டு யாகம் செய்தால் கிடைக்கும்
உனக்கும் மெய்ஞானம்
உன் அறிவை தீட்டி பகையை வீழ்த்தி
அன்பாய் வாழ்ந்திடு தினம் தினம்..........

No comments:

Post a Comment