உடல் வெளுக்க வந்தவளே
மினுமினுக்கும் சிரிப்பினிலே
மெய் சிலிர்க்க வைத்தவளே
முணுமுணுத்த பேச்சினிலே
மூழ்கடிக்க செய்தவளே
பளபளத்த மேனியினால்
வாய் புலம்ப விட்டவளே
குறுகுறுத்த நடையினாலே
கூத்தாட வைத்தவளே
கருகருத்த விழிகளினால்
காயம் நெஞ்சில் தந்தவளே
நெடுநெடுத்த கூந்தலினால்
கட்டி என்னை இழுத்தவளே
அலப்பிய உன் மேனி பளபளக்குது
புலம்பிய என் மனசோ வழுவழுக்குது
உன் உடலோ சுத்தமாச்சு
என் மனமோ அசுத்தமாச்சு
குளித்தவளோ கரையேற
நிமிந்து நானும் பார்க்க முன்னே
நித்திரை கலைந்ததடி
நிம்மதி தொலைந்ததடி....


No comments:
Post a Comment