Monday, 21 November 2016

பிஞ்சு மொழி சிந்தும் குஞ்சு ***

தேகம் தீண்டும் தென்றல் போலே
தேடி வந்த சொந்தம் நீ

தாகம் தீரும் அன்பு தந்து எனை
தாலாட்டும் தாயும் நீ

வானம் பூமி வாழ்த்தி நிற்கும்
வானவில் குட்டி நீ

காலை மாலை கவிசமைக்கும், 
என் கவிதை பூங்கா மொட்டு நீ 

கண்ணில் ஒத்தி நெஞ்சில் பொத்தி
உயிர் கலந்த உயிரும் நீ

எந்த பந்தமென்றறியா வந்து
சேர்ந்த சொந்தம் நீ

பிஞ்சு பஞ்சு மொழி சிந்தி
நெஞ்சினிக்கும் குஞ்சு நீ

வஞ்சம் இல்ல நெஞ்சணையில்
எனை கைதி செய்தாய்  ஏனடி.?

சாத்திரம் இல்லா பாத்திரம்

ஆத்திரம் கொண்டு பாத்திரம் 
ஏற்றால் வார்த்தையில் கூட 
வேற்றுமை உண்டு..

ஆசைகள் என்றும் ஓசைகளாகி 
பூஜைகள் செய்தால் பாசையில்
கூட தோசங்கள் உண்டு

அதன் பாசைகளே புரியாமல் 
வேதனைகள் முளைப்பதுண்டு

அதன் தாக்கத்தை அறியாது
ஏக்கத்தில் திளைப்பதுண்டு

இதில் சாத்திரம் ஏதுமில்லை
அதைமாத்திரம் நெஞ்சில் அள்ளு

பின் பாத்திரம் என்னவென்று
திடமாத்திரம் பற்றிக்கொள்ளு.

தீபம் ஏற்றும் தீண்டாமை*****


கட்டித் தொழுதும் கடவுளை 
பின் கண்களில் எதற்கிந்த 
நீர்த்துளி  

புதுப்பட்டுத் துணிகளை 
சாத்தியும் பட்டினி தீர்ந்தாதா 
வாழ்வினில் 

குட்டிக் கரணங்கள் போட்டும் 
ஏன் குற்றங்கள் குறைவில்லை 
நாட்டினில்

திட்டித்திட்டிதான் வாழ்கின்றாய்
பின் தீண்டாமை தீபத்தை ஏனோ
ஏற்றுறாய்

கட்டித்தழுவித் தான் வாழ்ந்துபார்
பின் உனை துட்டு வணங்கித்தான்
வாழ்த்துவார்

விளப்பரம் தேடும் பிரபலம்****


நியாயம் என்பார் நீதியென்பார்
 நால் திசையும் மோசமென்பார் 
நல்லது கெட்டது நான் சொல்ல
 நீ கொஞ்சம் கேளென்பார்

நடத்தையிலே விளப்பரத்தை 
நல்லபடி விதைத்திடுவார் 
நாட்டுக்கு நலமென்று 
நாகூசா நயத்தோடு நடித்திருவார்

காவோலை குருத்தோலை
 கதையெல்லாம் பேசிடுவார் 
கண்மூடிக் கவித்துவமாய்
 கருத்துக்கள் உரைத்திடுவார்

வரலாறு தெரியாமல் வசைபாடி 
வலை வீசிக் கவி வடிப்பார்,.
நாம் வழியின்றி தடுமாறி தவித்திட
வகுத்தோரை வழிகாட்டியென்றிடுவார்

அண்டம் காக்கையும் குள்ளநரியும் ****




கோபப்பட்டுக் கோபப்பட்டு இரத்தம் கொதிக்குதே,
 அதை சுத்தரிக்க முன்னம்
 நெஞ்சில் யுத்தம் வெடிக்குதே..

சத்தம்போட்டு சத்தம்போட்டு சித்தம் கலையுதே,
இதை கொக்கரிக்கும் நெஞ்சில் 
ஏன்பின் பித்தம் தெளியுதே...

பத்தவைத்துப் பத்தவைத்து பழிசுமத்துதே, 
நீ புத்தனுக்கு உறவு 
என்று பச்சைகுத்துதே

திட்டம் தீட்டி சட்டம் போட்டு கொடிபறக்குதே,
அதை எட்டி நின்று பார்த்த
 கண்ணில் தீப்பிடிக்குதே

மொட்டத்தலையில் பட்டம் சூட்டி காய்நகற்றுதே
அங்கு வட்டம் போட்டு 
குள்ளநரிகள் கூட்டம் குடைவிரிக்குதே

கச்சைகூட நமக்கின்று பிச்சையானதே 
அதையும் சில கொச்சைப்படுத்தி 
முச்சைகட்டி காற்றில் ஏவுதே

நச்சுப்பாம்பு கூடி நின்று நடனமாடுதே 
இதை நன்மை என்று வழிமொழிந்து 
அண்டம் காக்(க)கா வடைசுடுகுதே

மிச்சம் சொச்சம் சொல்லமுன்னே 
தெருநாய் குரைக்குதே,
போதும் விடு வேண்டாம் இனி வாயுளையுமே !

Saturday, 5 November 2016

ஊத்தைப்பொடியனும் உலகழகியும் *****



ஊத்தை பொடியன்டா நீ
ஊத்தை பொடியன்டா நீ
என்று சாட்டுப் போக்கா
சேட்டை பண்ணுறாளே

நாரத்தங்காய் கன்னம் மின்ன
ஊமத்தங்காய் நெஞ்சை அள்ள
ஏலக்காய் வாசம்கொண்டு முந்திரி 
மூக்காலே மந்திரிச்சு போறாளே

வெண்டைக்காய் விரலழகி
விழி வித்தைக் கண்ணழகி 
முல்லைப்பூ பல்லழகி, என்
முன்னாடி நீ உலகழகி

ஆலம்பழ உதட்டாலே 
அச்சடிக்க பார்ப்பவளே, 
அச்சடிக்க முன்னாலே 
பொச்சடிக்க வைப்பவளே

தந்தைக்கு உபதேசம் செய்த 
தகப்பன் சுவாமி போல், எனை
நங்கைக்கு நயமுரைக்கும் 
நாயகனாக்கியவளே

உச்சாரம் ஏற்றிவிட்டு அச்சாரம் 
கேட்பவளே, பெரும் செய்கூலி 
எனக்கெதற்கு,. சிறு சேதாரம் 
தான் உனக்கிருக்கு

உள்ளத்தினுள் ஏதோ ஒன்று
உருக்குலைந்து கிடக்குதடி
உள்ளுக்குள்ளே நீபுகுந்து பரிகாரம் 
செய்யேனடி பரியாரி நீயாகி..!!!

கண்கலங்கும் கலண்டர்





தேவதைக்கும் உனக்கும் ஆகாது

என்பதை நான் அறிவேன், ஆனால்
மெய்கண்டான் நாள்காட்டிக்கும்
உனக்கும் அப்படி என்னதாண்டி
தகறாறு ?

உன் பேச்சை எடுத்தாலே என்னை
ஏறிட்டு பார்ப்பதுமில்லாது திட்டி
சோகத்தில் மூழ்குதேடி !

ஓ.. தன்வசம் இருக்கும் அந்த திருமால்
மனைவி மகாலட்சுமியை விட நீயோ
மங்களகரமாய் மாணிக்கக்கல்லாட்டம்
ஜொலிக்கிறியே அதனாலோடி ..?

இப்ப சும்மா சொல்லுங்கோ

எப்ப என்ன சொன்னாலும் ராசா சாமி
உங்க காலை காட்டுங்கோ உங்க
காலை காட்டுங்கோ என்று அடிக்கடி
சொல்றாங்களே அப்படி ஏன் தான்
சொல்கிறாங்களோ தெரியலையே
இதோ கால் காட்டிட்டன் சொல்ல
வந்ததை இப்ப சொல்லுங்கோ பாப்பம்..!!!

சதி வேரூண்டி சாதியானது


நாய்களின் கூடாரம்,.அங்கே
நியாயங்கள் வியாபாரம்
நாணயச் சூதாட்டம்,.அதில்
நயவர்கள் வாலாட்டம்

சாதியின் வேரோட்டம்,.இங்கே
தரம்கெட்ட நரிக்கூட்டம்
கோவிலில் தேரோட்டம்,.அங்கும்
தேவாங்கு நடமாட்டம்

அர்ச்சனை அபிசேகம்,. அங்கே
ஆண்டவனை காணோம்
ஆலய வழிபாடு,. இங்கேயோ
ஆந்தைகள் பலநூறு

மனிதர்கள் எனும் பேரில்,.சில
மந்தைகள் வித்தையாலம்
சுவாசிக்க சுதந்திரம் இல்லை
இருந்தும் தீண்டாமை தின்னுதே நம்மை

காட்டிலே நீ கிடந்து சொன்ன
உன் வார்த்தைகள் என்னாச்சு
நாட்டுக்குள் வந்ததுமே உந்தன்
நாணயம் மண்ணாச்சு

உயிர் காக்க உனை அணைத்து
உணவிட்ட வேளையிலே
உறவென்று நீ சொன்ன
கதையெல்லாம் பொய்யாச்சு

ஒரு சட்டி பானையிலே பொங்கி
ஊரெல்லாம் சேர்ந்துண்டு,.இனி
வேற்றுமை இல்லாத ஒற்றுமை
நாமென்று சொன்னது நகைச்சுவயாச்சு

ஒட்டிப்பிழைத்த ஓநாய்கள் கூட்டம்
இப்போ முட்டி மோதி எட்டி நின்று
தட்டி விடுகுதே, அதை கட்டித்தழுவி
ஒரு கூட்டம் கைதட்டிக்கொள்ளுதே

தீண்டாமை உனக்கு உயர்வென்று
அன்று நீயெனை தீண்டாதிருந்திருந்தால்,
இன்று படிதாண்டாது நானிருந்து
உன்கூட தேவாரம் பாடமாட்டேன்

நம்மை விட நாய்கள் இனம்
மேன்மைதானடா அவை நக்கி
தின்றும் உன்னை போல் நன்றி
கெட்ட ஜீவன் இல்லடா.

வெட்கத்தில் பூத்த வியர்வை


யாதும் யாதும் யாதாயினும்
நீயும் நானும் ஒன்றாயினோம்

வானும் மண்ணும் மன்றாடினும்
நானும் நீயும் கொண்டாடினோம்

மேலும் கீழும் திண்டாடினும்
பூவின் தேனை உண்டாடினோம்

நாணம் வெட்கம் கண்ணாயினும்
வியர்வை பூக்க கண்மூடினோம்

காதல் காமம் இரண்டாயினும்
கூடிக் குலவி பண்பாடினோம்

விழிகள் மொழியில் துண்டாடுதே
விடியும் வரைக்குள் என்னாகுவோம் ?

நீ பிரம்மன் வடித்த சிற்பமடி ****



பாவட்டம் தளிரைப்போலே 
பாவை உந்தன் வெட்கமடி 
சேர்த்து பார்த்து ரசிக்கமுன் 
கூட்டிப்போறாய் சொர்க்கமடி

புடலங்காய் கால்கள் ஊன்றி 
புதையல் ஒன்று பூட்டிவைத்து 
புதுமை ஒன்று செதுக்கவென்று 
புறப்பட்டானோ பிரம்மனன்று ?


கண் வடித்து கனி வடித்து 
கன்னத்திலே குழி வடித்து 
அதை வடித்து இதை வடித்து 
அங்கமெல்லாம் வடிவமைத்து

இமை வரைந்து இதழ் புனைந்து 
இவற்றினுளே சுவை புதைத்து 
இடை வடிக்கும் இடையினிலா 
இறந்து விட்டான் பிரம்மனடி

சாயம் போன தலையணை ****


உனக்கும் உன்னை கட்டியவனுக்கும்
அவ்வளவு பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது,
ஏன் என்று கேட்கிறாயா ?

அன்று நீ பூத்துக் குலுங்கும்போது
அள்ளி முத்தமிட்டு அணைத்துக்கொண்டவன்
சலித்துப் போனதும் வெட்டி விட்டான்

இன்று உன் தனிமையை போக்க
இரவும் பகலும் இணைந்து கொடுத்த என்னை
சாயம் போனதும் தள்ளிவைத்துவிட்டாய்

இங்கனம் என்றும் உன் வியர்வை வாசம் மறவாத
கிளிந்து போனதும் நீ தூக்கிவீசிய
உன் மோகத்தில் நனைந்த தலையணை!

எப்பிறப்பிலும் என்னவளாய் ****


முற்பிறப்பில் என் துணையாய்
இப்பிறப்பின் என் உயிராய், 
ஏன் எப்பிறப்பிலும் என்ன(அ)வளாய் 
நீ பிறக்க வேண்டுமடி

உன் அருகே நான் இருந்து 
உனக்காக வாழ்ந்திடுவேன் 
என் எதிரே நீ இருந்து, 
உந்தன் காட்சி தரவேண்டுமடி


பைந்தமிழே என் பகல் நிலவே
 பாலைவனத்து பனித்துளியே 
சேலை உடுத்த திரவியமே,.
என் மாலை வேளை மல்லிகையே

நாவினிக்கும் நாயகியே 
நள்ளிரவின் சொப்பனமே
தென்றலே திருவடியே 
திகட்டாதசெம்மொழியே
உன் வாசம் எந்தன் சுவாசமடி !

நிலை புரியா நிலமை***



பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்
உருக்குலைந்தாடும் சருகுகள்போல் 
கரை தொட அலைகின்றோமே

அதன் நிலை தன்னை அறியாது 
கரைவந்து சேரமுன் குலையோடு அள்ளிட
 விலையென்ன என்கிறோமே

தெரியா மேடையில் புரியாத பாசையில்
சதிராடும் கூட்டம் நாமே, இங்கு சரித்திரம் கூட 
தரித்திரம் என்று சான்றிதழ் உள்ளதாமே!

தொண்டு செய்யும் வண்டு நான் ******

மேனி வெந்து சிவந்திட்ட பெண்டிளாள்
உன் நெஞ்சு குளிந்ததா என்னினால்
பஞ்சு மிளிர்கின்றா கூந்தாளாள்..என்
மஞ்சம் மலர்ந்ததே உன்னினால்

கருவண்டு தவழ்ந்திடும் கண்ணிளாள்
உனை கண்டு மகிழ்கிறேன் காளை நான்
தொண்டு புரிகின்ற சொண்டிளாள்
உனை உண்டு மயங்கிய வண்டு நான்

முட்டி நெகிழ்ந்திடும் செம்புடையாள்
எனை கட்டி இழுத்துடும் தும்பிடையாள்
வெட்டி விழுத்திடும் தண்டுடையாள் 
சுளை பொத்தி ஒழித்திட்ட தேனடையாள்

எனை குத்தி சாய்த்திடும் கூர்விழியாள்
என் புத்தி மரிக்கிதே தேன்மொழியால்
முத்தி நிலைதனை நானடைய....எனை
பற்றிக் கொள்ளேண்டி பாலகனாய்.....!!!