Thursday, 22 March 2012

கடவுளுக்கு ஓர் கடிதம் ***

 

கடவுளுக்கு ஒரு கடிதம்
கருணையுடன் எழுதுகிறேன்
முகவரி தெரியவில்லை
மூதோரைக் கேட்கின்றேன்
அவருக்கும் தெரியவில்லை
அசடு வழியச் சிரிக்கின்றார்
உன் பெயரை சொல்லி இங்கு
உருக்குலைந்து போவோர்க்கு
என்ன புத்தி சொல்வேன் நான்
உனை எங்கு கண்டு நானுரைப்பேன்
கள்ள மனம் கொண்டவரும்
வெள்ளை மனக் காரறென்று
பிள்ளை மொழி அள்ளி வீசி
கொள்ளை பல செய்கின்றார்
உன் நாமம் உரைத்து என்றும்
நல்லோருக்கு நாமம் இங்கே........ !!!
இதை நான் யாருக்குச் சொல்லி அழ
உன் முகவரி தெரியவில்லை ........???—

No comments:

Post a Comment