Monday, 14 March 2016

சிலை அல்ல விலை பேச



    கலை மானின் ஜாடைகொண்டு
    குலை போட்ட வாழை ஒன்று
    சிலை போலே நிற்கக் கண்டு
    தலை ஆட்டும் பொம்மை என்று
    வலை வீசும் கூட்டம் வென்று ...
    விலை பேசும் மானின் கண்ணில்
    மழை பெய்யும் கோலம் கண்டு
    அலை பாயும் நெஞ்சம் ஒன்று
    கொலைகாரி ஆனாள் இன்று..!

Thursday, 10 March 2016

புத்திக்கும் பக்திக்கும் அவள் தனி


தித்திக்கும் தேன் மொழியாள்
பத்திக்கும் விழி ஒளியாள்

குத்திக்கும் குரல் இசையாள்
முத்திக்கும் தனி உடையாள்

புத்திக்கும் விடை கொடையாள்
தத்திக்கும் நடை அழகாள்

மத்திக்கும் நிலை குலையாள்
எந்த சக்திக்கும் தலை குனியாள்

அந்த கத்திக்கும் இவள் மிரளாள்
அவளே எந்தன் குலவதுவாள்...!

Monday, 7 March 2016

பென் அடிமை

இம்மாதம் மகளீர் தினத்தை முன்னிட்டு வெளியான
ஒளி அரசி மாதச் சஞ்சிகையில் எனது கவிதை !

சீவிச் சிங்காரித்தும் காய்ந்து போன வாழ்வு


    சித்தரித்து சித்தரித்து
     சிறகடிக்கத் தடை விரித்து

    மந்திரித்து மந்திரித்து
     மடமையென மறுதலித்து

    மக்கரித்து மக்கரித்து
     மாறுதலை தறுக்கணித்து

    சிங்காரித்து சிங்காரித்து
     சிறுமையென சின்னமிட்டு

    மாந்திரித்து மாந்திரித்து
     மகிமையென மணியடித்து

    மாஞ்சு மாஞ்சு ஓஞ்சு காஞ்சு
     பூஞ்சணம் பிடிக்குதே வாழ்வு !

சேமித்து வைக்கும் முத்தங்கள்

    நான் கொடுப்பதையெல்லாம்
    சேமித்து வைத்துக்கொள்.
    நான் கேட்கும் போதெல்லாம்
    திருப்பிக் கொடுப்பதற்கு அல்ல
    நீ கொடுக்காமல் இருக்கும்போதெல்லாம்...
    நான் உனை கேட்காமல் எடுப்பதற்கு !

    <<<<இப்படிக்கு இதழ்கள்>>>>

சோகத்திலும் ஒரு சுகம்

      வெளிநாட்டு வாழ்க்கையில் சோகத்திலும்
      ஒரு சுகம் ......... அண்ணா நீ அனுப்பிய காசு
      கிடைத்தது அம்மாவுக்கு ஒரு சேலையும்
      அப்பாவுக்கு சாய்ந்து உட்கார்வதற்கு ஒரு
      சாய்வு நாற்காலியும் தங்கைக்கு சின்னதாக...
      ஒரு தோடும் அம்மம்மாவுக்கு இருமல்மருந்தும்
      வாங்கினோம் என்ற வார்த்தை கேட்கும் போது.!

என்னவளுக்கு ஒரு செய்தி

    இலங்கையில் வெளியாகும் சுடர் ஒளியின் இன்னொரு
    வெளியீடான ஒளி அரசி மகளீர் மாதச் சஞ்சிகையில்
    எனது கவிதை வெளிவந்துள்ளது.

    சிறந்த கவிதைகளை தேடி எடுத்து அவர்களை பாராட்டி வாழ்த்துவது மட்டுமின்றி கவிதைகளையும் பத்திரிகையில் பிரசுரித்து மகிழ்ந்து நிற்கும் இந்த நல் உள்ளங்களை நான் என்ன சொல்லி வணங்க, பல சமுக நலம் பேணும் அறிவுபூர்வமான நிகழ்வுகளை தாங்கி வரும் இப்பத்திரிகை மேலும் மேலும் பல சாதனைகள் புரிய என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கூறுவதோடு மட்டுமின்றி என்னை தேடி எடுத்து என் கவிதைகளை பிரசு...ரித்து மனதார வாழ்த்திப் பாராட்டும் (குறிப்பாக என்னைக் கண்டெடுத்த) இந்த இரு அன்புறவுகளுக்கும் என் நன்றியை வணக்கத்துடன் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன்.வாழ்க வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் நல் தொண்டு.
    ** எனக்கு அனுப்பிய வாழ்த்து மடல் **
    என் தாய்த்தேசம் பெற்ற கவி மகனே
    நீ----கவிஞனா அல்லது கடவுளா..?
    உன் கவியின் நயம் கண்டு சிலிர்த்துப்
    போனோம். உன் தமிழ்ப் புலமைக்கு
    தலை வணங்குகின்றோம். இப்படியொரு
    கவியை இது வரை கண்டதில்லை.
    காதலின் மனமதனாய் மார்க்க பேதங்களின்
    பாரதியாய் தத்துவத்தின் கவிஞனாய்
    எல்லாமாய் பிரசவிக்கிறாய் கண்ணன் கண்ணராசனாய்.

தினங்கள் பல விதங்கள்


இன்று காத(ல்)லர்கள் தினம்
இதில் காதலோ பல விதம்

சிலர் காண்கின்றார் தனிச் சுகம்
பலர் ஏங்குகின்றார் ஒரு கணம் ...

தூக்கத்தில் எழுப்பி தூது விடும்
துன்பத்தைத் தேடி ஓட விடும்

உறவினை பிரித்து தனித்து விடும்
உண்மைகள் மெல்ல செத்து விடும்

முகத்திரை கிழிந்து மண்ணில் விழும்
முகவரி அறுந்து விண்ணில் தொடும்

காதலில் இதுதானா உச்சக் கட்டம்
காதலர்கள் இட்டிடும் முத்த சத்தம்

கடைசியில் இதற்காடா நித்தம் யுத்தம்.?