Wednesday, 21 March 2012

தாவணியில் பசுக்கன்று ***



சொற்பனத்தில் வந்தவளை
கற்பனையில் வைத்து நான்
ஒத்திகை பார்க்கின்றேன்

பாவாடை தாவணியில் ...
பசுக்கன்று மேய்ப்பாளோ
ரி,சர்ட் ஃபாண்ட் அணிந்து
நாய்குட்டி வளப்பாளோ

பூனைக்குட்டியத் தன்
பிள்ளை எனச்சொல்வாளோ
வெள்ளிக் கொலுசோடு
துள்ளி வருவாளோ

துப்பட்டா போடாமல்
சுடிதாரில் திரிவாளோ
பின்னிப் பூ முடித்து
தண்ணீர் சுமப்பாளோ

குஞ்சுக் கையாலே
கஞ்சி வடிப்பாளோ
பிஞ்சு விரல்களால்
மஞ்சள் தேய்ப்பாளோ

மச்சானை நினைத்து
மருதாணி வைப்பாளோ
பாட்டி பசிக்குதென்றால்
ஊட்டி விடுவாளோ

பேத்தி குலத்திற்கு
பெருமை சேர்ப்பாளோ
அல்ல வாத்திச்சியாகி
எனை வாட்டி வதைப்பாளோ ?

No comments:

Post a Comment