Wednesday, 21 March 2012

பிரம்மனின் பெருந்தன்மை


பஞ்சு மிட்டாய் கன்னத்திலே
குண்டு மல்லி மின்னுதே
................. ஓ அது அவள்
வேர்வைத் துளியோ
பிளந்து வைத்த மாதுழையில்
பிழிந்தெடுத்த சாறு இவள்
உதட்டோரம் சிந்தும்
புன்னகையோ,
சூரியனில் சுளை பிடிங்கி
சூத்திரமாய் அதை அடக்கி
பாவை அவள் விழிக்குள்ளே
படைத்தானோ பிரம்மன் அன்று ,
செவ்வாழை தண்டிரண்டை
தேகத்திலே ஒட்டி வைத்து
நங்கை அவள் அசைந்து வரும்
நடை அழகைப் பார்க்கையிலே
கல்லான இதயம் கூட ஐயகோ
புல்லாகப் பொசுங்கி எரியுதடா

No comments:

Post a Comment