புன்னகையில் புயல் வடித்து பூமியிலே சிந்துதடி
கயல்விழியில் அம்பெடுத்து காயமின்றி ஈட்டுதடி
காலடியில் நான் விழுந்து காவியங்கள் பாடுகின்றேன்
கார்மேகக் கூந்தலினால் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்
மறுப்பேதும் காட்டாமல் மனச் சிறைக்குள் புகுந்து விட்டேன்
மன்னிப்பு தந்து நீயோ மனக்கதவை திறக்காதே
இதயத்தை திருடியவன் இவனே தான் திருடன் என்று
ஈப்பிக்கோ சட்டத்தில் இதையத்தில் பூட்டிவிட்டாய்
உள்ளம் எனும் சிறையில் நான் உல்லாசக் கைதியடி
ஊஞ்சல் ஒன்று நீதந்து உறக்கம் கொள்ளப் பாடிகின்றாய்
கைதான பின்பும் நான் காண்மூடித் தூங்கவில்லை
கம்பியை நான் எண்ணாமல் கன்னியை தான் எண்ணுகிறேன்...

No comments:
Post a Comment