பார்த்து மெல்லச் சிரித்தாள்
இருபது கவிதைகள் எழுதினேன் ,,,,
இருவருக்கும் என்ன உறவென்றாள்
முப்பது கவிதைகள் எழுதினேன்
முடிவெடுக்க நேரம் கேட்டாள்
நாற்பது கவிதைகள் எழுதினேன்
நானும் நீயும் ஒன்றென்றாள்
ஐம்பது கவிதைகள் எழுதினேன்
ஐம்புலத்திலும் நீ தான் என்றாள்
அறுபது கவிதைகள் எழுதினேன்
ஆயுளே உனக்கு என்றாள்
எழுபது கவிதைகள் எழுதினேன்
ஏழு ஜென்மத்துக்கும் நீ என்றாள்
எண்பது கவிதைகள் எழுதினேன்
என்னில் தன்னை கண்டேன் என்றாள்
தொண்ணூறு கவிதைகள் எழுதினேன்
தொலைந்து போனாள் தொலைதூரம்
நூறு கவிதைகள் எழுதினேன் ,,,,
...........?....?.....?.........?.........?..........?...........?

No comments:
Post a Comment