Monday, 12 March 2018


எல்லோருக்கும் ஏதோ
தேவைப்படுகின்றது
அதனாலே உள்ளங்கள்
பெரும் காயப்படுகின்றது

நல்லோருக்கும் அது
நியாயப்படுகின்றது
வல்லோருக்கு மட்டும்
தன் வசப்படுகின்றது

என்னோர் உன்னோர் என
யாருக்கு எவருள்ளோர் ?
முன்னோர் பின்னோர் என
முனைப்போர் நகைப்போர்

இல்லோர் இருப்போர் இனி
எதற்கும் உதவாதோர் என
நயப்போர் செழிப்போர் தனில்
எளியோர் என்று எழுவோர்

உழைப்போர் உய்யாதோர்
உண்போர் உணராதோர் என
உருக்குலைந்து கிடப்போர்
உலகில் ஊரிப்பட்டோர்..

கொடுப்போர் தடுப்போர் என
நடிப்போர் கிடையோர் இங்கே
எடுப்போர் உடையோர் என்று
நடத்துகிறார் மாபெரும்போர் !

No comments:

Post a Comment