நான் கதை ஒன்று சொல்லப்போறேன்
காதைக் கொடுத்துக் கேளடி
என் கதையில் நீயும் சொக்கிப்போனால்
உன் கவிதையாவேன் நானடி
நான் விதை ஒன்று போட்டு வைத்தேன்
வீணாய்ப் போகவில்லையடி
நீயோ விடை சொல்லித் தடை போட்டும்
நான் தள்ளிச் செல்லவில்லையடி
உந்தன் புல்லாங்குழல் மொழிகேட்டு
நான் குயில் குஞ்சு ஆனேனடி
எந்தன் ஒளிதீபம் நீயே என்று தினம்
கவிபாடிக் கொள்வேனடி
நீ துயில் கொள்ளும் வேளை தன்னில்
உன் துணையாவேன் நானடி
என் உயிர் போகும் போது கூட உந்தன்
நிழல் வேண்டும் எனக்கடி !
காதைக் கொடுத்துக் கேளடி
என் கதையில் நீயும் சொக்கிப்போனால்
உன் கவிதையாவேன் நானடி
நான் விதை ஒன்று போட்டு வைத்தேன்
வீணாய்ப் போகவில்லையடி
நீயோ விடை சொல்லித் தடை போட்டும்
நான் தள்ளிச் செல்லவில்லையடி
உந்தன் புல்லாங்குழல் மொழிகேட்டு
நான் குயில் குஞ்சு ஆனேனடி
எந்தன் ஒளிதீபம் நீயே என்று தினம்
கவிபாடிக் கொள்வேனடி
நீ துயில் கொள்ளும் வேளை தன்னில்
உன் துணையாவேன் நானடி
என் உயிர் போகும் போது கூட உந்தன்
நிழல் வேண்டும் எனக்கடி !

No comments:
Post a Comment