நீ கூந்தல் நிறையப் பூ வைத்து
என் முன்னே வலம் வருவது
எனக்கு கொள்ளைப்பிரியம்...
இருந்தும் உனக்கு நான் பூ வாங்கும்
போது மூன்று முழத்துக்கு அதிகம்
எப்போதும் வாங்குவதில்லை
ஏன் தெரியுமா என் பஞ்சுருட்டானே
உந்தன் குஞ்சுப் பாதங்களும் பிஞ்சு
விரல்களும் பாரம் தாங்காது
எங்கே ஒடிந்து உனக்கு வலித்திடுமே
என்ற அச்சத்தினாலும் எந்தன் அன்பின்
உச்சத்தினாலும் தானடி !

No comments:
Post a Comment