Monday, 12 March 2018

மாதுளை பிளந்தெடுத்து
மரகதம் சேர்த்திணைத்து
மதுக் கடலில் குழைத்து
மங்கையென உன்னை
மண்ணிலே போட்டது யார்

நறுவிலிப் பழம் பிழிந்து
விடிவெள்ளி உடைந்து
அதனிலே துவளெடுத்து
கதிரவன் ஒளி பறித்து, உன்
கண்களுக்குள் ஒளித்தது யார்

சட்டென பார்க்கையிலே
கட்டென மனம்துடிக்கும்
செம்பருத்தி மொட்டினை
போல் அமைத்து, உன்னை
புவியில் உலவ விட்டது யார்

தட்டிட மேனி சிவக்கும்
முட்டிட சொர்க்கம் திறக்கும்
தொட்டிட தோகை விரிக்கும்
பஞ்சுருட்டானே உனை எனை
துவட்டிப்போட சொன்னது யார் ?

No comments:

Post a Comment