Monday, 12 March 2018

செருப்பினை குளிப்பாட்டி
செந்நீரால் அலங்கரித்து
நெருப்பினில் போடும் கதை
பொறுப்புடன் யார் கேட்பார் ?

மரக்கறி சமையலிலே
மான் கறி கலந்துவிட்டு
தலைக்கறி கேட்கின்ற
தலைக்கணம் விளங்காயோ

உரல் வலி அறியாததோர்
உலக்கையின் கதைபோலே
உளமறியாத உருவங்கள்
உலகத்தில் பல உண்டு

சிலை வழிபாட்டில்
சிறு நரிக்கூட்டங்கள்
கலை மொழி நாட்டில்
கழுகுகள் நோட்டங்கள்

சுடர் இனி விடுமோ
சுகந்திரத் தாகம்
சுவையதில் பெறுமோ
சுயநலக் கூட்டம்

இனி வரும் காலம்
எதன் படி ஓடும்
இருக்கின்ற கோலம்
எதுவரை நீளும்

சரி செய்யும் கூட்டம்
சந்தையில் நாட்டம்
சாத்தான்கள் கையில்
சாவிகள் மொத்தம்

நித்தமும் நித்தமும்
எத்தனை ஓலம்
அத்தனை கேட்டுமா
இன்னமும் ஊனம்..!!!

No comments:

Post a Comment