நான் வேற்றுலகத்தில் வேதம்
கற்கிறேன் வேள்வி முடிந்ததும்
விரதம் முடிக்கிறேன்
நீ காற்றுலகில் கனவுகாண்கின்றாய்
உனக்கு கவிதை வடித்திட
வெள்ளைக் காகிதம் எதற்கு
நான் மேற்குலகில் ஞானம்
பெற்றவன் என் யாகக்கிடங்கில்
பல ஜாலம் கண்டவன்
நீ பூஜை முடிந்தபின் பூக்கள் கொய்கிறாய்
நான் புலரும் பொழுதிற்கு
புடவை நெய்கிறேன்
நீ யானை தந்தத்தால் அலகுபாச்சுறாய்
நான் அறுகம்புல்லுடன்
அன்பு கொள்கிறேன்
நீ பாலை வனத்தில் பயிர்கள் நாட்டுறாய்
நான் பாசப்பிணைப்பினால்
ஏரு பூட்டுறேன்
நீ அன்பை அழித்து அழைப்பிதழ் அனுப்பிறாய்
நான் ஆசீர்வதித்து ஆரத்தி எடுத்து
வாழ்த்துப்பாடுறேன்
நீ தாகம் தீர்த்திட என் தவத்தைக்கலைத்தவன்
நான் தவறிப்போனதால் உன் பெண்மை
வென்றவள்
நீ நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்துறாய்
நான் நொச்சிப் பூவாய் உன்னை
என் கண்ணிகளில் ஒத்துறேன் !
கற்கிறேன் வேள்வி முடிந்ததும்
விரதம் முடிக்கிறேன்
நீ காற்றுலகில் கனவுகாண்கின்றாய்
உனக்கு கவிதை வடித்திட
வெள்ளைக் காகிதம் எதற்கு
நான் மேற்குலகில் ஞானம்
பெற்றவன் என் யாகக்கிடங்கில்
பல ஜாலம் கண்டவன்
நீ பூஜை முடிந்தபின் பூக்கள் கொய்கிறாய்
நான் புலரும் பொழுதிற்கு
புடவை நெய்கிறேன்
நீ யானை தந்தத்தால் அலகுபாச்சுறாய்
நான் அறுகம்புல்லுடன்
அன்பு கொள்கிறேன்
நீ பாலை வனத்தில் பயிர்கள் நாட்டுறாய்
நான் பாசப்பிணைப்பினால்
ஏரு பூட்டுறேன்
நீ அன்பை அழித்து அழைப்பிதழ் அனுப்பிறாய்
நான் ஆசீர்வதித்து ஆரத்தி எடுத்து
வாழ்த்துப்பாடுறேன்
நீ தாகம் தீர்த்திட என் தவத்தைக்கலைத்தவன்
நான் தவறிப்போனதால் உன் பெண்மை
வென்றவள்
நீ நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்துறாய்
நான் நொச்சிப் பூவாய் உன்னை
என் கண்ணிகளில் ஒத்துறேன் !

No comments:
Post a Comment