Monday, 12 March 2018


எதுதான் ஆனாலும் இதுவே தானென்றால்

இதுவும் ஓர் நாளில் அதுவே தானாகும்

அதுவும் இதுவாகும் எதுவும் உதுவாகும்

எதுதானானாலும் உரு நீ மாறாதே,...உன்

உலகம் வேறாகும் உணர்வே வேராகும்

உயிரே போனாலும் உனை நீ மாற்றாதே

உணர்வை கொல்லாதே உண்மை வெல்லாதே

பருவம் முன்னாலே பழக்கம் செல்லாதே

தருணம் தான்கண்டு தலை நீ சாய்த்தாலே

அதற்கும் உனக்கும் எதுதான் வேற்றுண்டு ?

No comments:

Post a Comment