விழிவழி புகுந்தோடி
வியப்பிலே எனையாள்த்தி
வியர்வையில் குளிப்பாட்டி
விந்தையாய் திகழ்ந்தாயே
காதலின் காவியமாய்
கண்முன் ஓவியமாய்
மயக்கிடும் லேகியமாய்
மடியினில் குழவியாய்
மார்பினில் மாணவியாய்
மனதினில் மனைவியாய்
செயலினில் சேவகியாய்
இயல்பினில் வாசுகியாய்
எனக்கேற்ற துணையாகி
எனக்குள்ளே குடியேறி
ஏழேழு ஜென்மத்தினை
ஏழுதிவிட்டாய் என் நெஞ்சில்
சூடிய பூமாலையாய்
மேனியில் படர்ந்தாயே
நாவெனும் தூரிகையால்
நான் உனை வரைந்தேனே
பூவினில் தேன் துளி
புள்ளிகள் போட்டிட
பூவையின் மேன்மையில்
புல்வெளி வசையிட
தாமரை இதழ்களின்
தரிசனம் கிடைத்திட
தாவிய காளையோ
தாகத்தில் தவழ்ந்திட
பொத்திய கைக்குள்
பொரித்த குஞ்சாய்
புன்னகை பூத்ததே
புதுமலர்ச் செண்டாய்
காலமும் நேரமும்
கண்விட்டு மறைந்திட
கட்டிலில் இருமலர்கள்
காற்றினில் மிதந்திட
கட்டினால் காளையின்
காரியம் கெடுமென்று
கைகளை விரித்து
கலைகளை ரசித்திட
முற்றும் துறந்த
முனிவர்கள் போலே
மூழ்கிய கடலில்
முத்துக்கள் எடுத்திட
சிணுங்கலும் அனுங்கலும்
சீருடை களைந்திட
சிவந்த கன்னங்கள்
சீதணம் கேட்டிட
நூலறுந்த பட்டமாய்
நுகர்வதில் சுற்றிட
நூறு முத்தங்கள்
நுற்ப்பமாய் கற்றிட
பாலை வனத்தில்
பனித்துளி போலவே
பாவை உருகி
பரவசம் கொண்டிட
மாலை வேளையில்
மந்திரம் தொடங்கி
பூஜைகள் முடிந்து
புலர்ந்தன பொழுதுகள் !
வியப்பிலே எனையாள்த்தி
வியர்வையில் குளிப்பாட்டி
விந்தையாய் திகழ்ந்தாயே
காதலின் காவியமாய்
கண்முன் ஓவியமாய்
மயக்கிடும் லேகியமாய்
மடியினில் குழவியாய்
மார்பினில் மாணவியாய்
மனதினில் மனைவியாய்
செயலினில் சேவகியாய்
இயல்பினில் வாசுகியாய்
எனக்கேற்ற துணையாகி
எனக்குள்ளே குடியேறி
ஏழேழு ஜென்மத்தினை
ஏழுதிவிட்டாய் என் நெஞ்சில்
சூடிய பூமாலையாய்
மேனியில் படர்ந்தாயே
நாவெனும் தூரிகையால்
நான் உனை வரைந்தேனே
பூவினில் தேன் துளி
புள்ளிகள் போட்டிட
பூவையின் மேன்மையில்
புல்வெளி வசையிட
தாமரை இதழ்களின்
தரிசனம் கிடைத்திட
தாவிய காளையோ
தாகத்தில் தவழ்ந்திட
பொத்திய கைக்குள்
பொரித்த குஞ்சாய்
புன்னகை பூத்ததே
புதுமலர்ச் செண்டாய்
காலமும் நேரமும்
கண்விட்டு மறைந்திட
கட்டிலில் இருமலர்கள்
காற்றினில் மிதந்திட
கட்டினால் காளையின்
காரியம் கெடுமென்று
கைகளை விரித்து
கலைகளை ரசித்திட
முற்றும் துறந்த
முனிவர்கள் போலே
மூழ்கிய கடலில்
முத்துக்கள் எடுத்திட
சிணுங்கலும் அனுங்கலும்
சீருடை களைந்திட
சிவந்த கன்னங்கள்
சீதணம் கேட்டிட
நூலறுந்த பட்டமாய்
நுகர்வதில் சுற்றிட
நூறு முத்தங்கள்
நுற்ப்பமாய் கற்றிட
பாலை வனத்தில்
பனித்துளி போலவே
பாவை உருகி
பரவசம் கொண்டிட
மாலை வேளையில்
மந்திரம் தொடங்கி
பூஜைகள் முடிந்து
புலர்ந்தன பொழுதுகள் !

No comments:
Post a Comment