Monday, 12 March 2018


உரித்த நேரத்தில் கலைந்த கோலங்கள்
குறித்த காலத்தில் மரித்த கோணங்கள்
விரித்த இறக்கைகள் ஒடிந்த ஓலங்கள்
சுவாசச் சுவட்டில் பிணத்தின் வாசங்கள்
இறுதிச் சடங்கில் குருதிப் படையல்கள்
இடுகாட்டு முகவரி இனிக்கும் தகவல்கள்
மரண ஊர்வலத்தில் சடல நாதசுவரங்கள்
எட்டுச் செலவன்று இதயப் பொரியல்கள்
கடைசி நாள் கண்ணீரால் பன்னீர் தூவல்கள்
வேண்டியவர்கள் விருந்துண்டு மகிழுங்கள்
தாண்டியோர்கள் தலைமுழுகி செல்லுங்கள் !

No comments:

Post a Comment