உன்னைக் கடவுள் என்று
சொன்னதாலே என் கண்
திறந்து விட்டாயா..?
என் கண் திறந்து விடுவாய்
என உன்னை நான் கடவுள்
என்று சொன்னேனா..?
இனி எந்த உறவே இல்லை
என்ற பின்னும் என் உயிரில்
ஒட்டிக் கொண்டாயா..?
உயிரில் தானே உறவு என்று
என்னை உருக வைத்து
தினமும் கொல்வாயா..?
சாம்பல் கடலில் கரைக்கும்
வரைக்கும் சிறு சாபம் போட
மாட்டன் நான்
சாம்பல் கரையும் வேளை கூட
எந்தச் சாயம் போகா எந்தன்
அன்பு மலர்ச் சரம் நீ ....!
சொன்னதாலே என் கண்
திறந்து விட்டாயா..?
என் கண் திறந்து விடுவாய்
என உன்னை நான் கடவுள்
என்று சொன்னேனா..?
இனி எந்த உறவே இல்லை
என்ற பின்னும் என் உயிரில்
ஒட்டிக் கொண்டாயா..?
உயிரில் தானே உறவு என்று
என்னை உருக வைத்து
தினமும் கொல்வாயா..?
சாம்பல் கடலில் கரைக்கும்
வரைக்கும் சிறு சாபம் போட
மாட்டன் நான்
சாம்பல் கரையும் வேளை கூட
எந்தச் சாயம் போகா எந்தன்
அன்பு மலர்ச் சரம் நீ ....!

No comments:
Post a Comment