Monday, 12 March 2018

வியர்க்க விறுவிறுக்க
வேலை செய்து, பிஞ்சு
வெண்டக்காய் விரல்களால்
தொட்டெடுத்து

நாக்குக்கும் மூக்குக்கும்
படையல் வைத்து
நாசுக்காய் நடத்தினாள்
வேள்வி ஒன்று

பேச்சிலும் மூச்சிலும்
தீயை மூட்டி, இதை
தின்னெனச் சொன்னவள்
கொட்டுப்பூச்சி

நெஞ்சினை மஞ்சமாய்
வென்றெடுத்து, தன்
இறக்கையை விரித்ததே
பட்டாம்பூச்சி

தென்றலும் திங்களும்
மெட்டமைக்க பூவிலும்
காம்பிலும் தேன்சுவைத்து
பூமியை தாண்டுதே வண்டிரண்டு!

No comments:

Post a Comment