பருவக் காற்றா நானென்று தினம்
உருகிக்கொண்டேன் எனக்குள்ளே
உருவம் இருந்தும் உணர்வற்ற
சுருவம் போலே வாழ்கின்றேன் !
பொத்திப் பொத்தி வளர்த்தாலும்
பூவாய்ப் பொன்னாய் மதித்தாலும்
பக்த்தி முக்த்தித் தொழுதாலும்
குத்திக் கிழிக்கும் நிலை ஏனோ..
செத்துச் செத்து பிழைக்கின்றேன்
செய்தி சொல்லி மரிக்கின்றேன்
உயிர் விட்டுப்போக முன்னேனும்
இமையை கொஞ்சம் திறக்காயோ...?
எனக்கும் எல்லாம் உள்ளுண்டு
எடுத்து விட்டால் நிலை என்ன
அதுதான் உந்தன் மகிழ்வெனில்
இதுவும் ஒருநாள் கடந்தாகும் ..!
உருகிக்கொண்டேன் எனக்குள்ளே
உருவம் இருந்தும் உணர்வற்ற
சுருவம் போலே வாழ்கின்றேன் !
பொத்திப் பொத்தி வளர்த்தாலும்
பூவாய்ப் பொன்னாய் மதித்தாலும்
பக்த்தி முக்த்தித் தொழுதாலும்
குத்திக் கிழிக்கும் நிலை ஏனோ..
செத்துச் செத்து பிழைக்கின்றேன்
செய்தி சொல்லி மரிக்கின்றேன்
உயிர் விட்டுப்போக முன்னேனும்
இமையை கொஞ்சம் திறக்காயோ...?
எனக்கும் எல்லாம் உள்ளுண்டு
எடுத்து விட்டால் நிலை என்ன
அதுதான் உந்தன் மகிழ்வெனில்
இதுவும் ஒருநாள் கடந்தாகும் ..!

No comments:
Post a Comment