ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஒற்றை வாசல் வீடு
உள்ளத்திலே தில் இருந்தால்
உள்ளே வந்து பாரு
ஐந்து ஆறு ஏழு எட்டு
அத்தனையும் சூது
ஐம்புலனும் அடங்கிவிட்டால்
அதற்கு என்ன பேரு
அன்பு பாசம் நேசமெல்லாம்
ஆசையிட்ட கோடு
அதில் உனக்கு முரனிருந்தால்
அனுபவித்துக் கூறு
இன்ப துன்பம் எதுவரைக்கும்
இடை நிறுத்திக் கேளு
இதயம் சொல்லும் கதைகேட்டு
இங்கு வந்து பாடு
உண்மை நேர்மை உள்ளவர்க்கு
உள்ளத்திலே கீறு
உன்னை மட்டும் வாழ வைக்க
உருவெடுத்து ஆடு
காதல் காமம் கலவியென்று
கலைநிகழ்ச்சி போடு
கண்திறந்து பார்க்க முன்னே
கதவைப்பூட்டி ஓடு
மாலை சூடி மணம் முடித்து
மனைவியென்பதாரு
மயக்கம் கொஞ்சம் தீர்ந்தபின்னே
மண்ணை வாரித் தூவு
கணவன் என்று பெயர்சூட்டி
காரணத்தை நகர்த்து
காரியங்கள் முடிந்துவிட்டால்
காலைவாரி விழுத்து
ஆசைகள் தீர்க்க ஆயுதமாய்
அன்பை அள்ளி தெளித்து
அனுபவித்து உமிழ்ந்த பின்னே
ஆயுள்ரேகை எதற்கு
சொல்லச் சொல்லக் கண்கசிந்து
கவிவடிக்க மறுத்து
என் இதயம் மெல்ல சாகிறதே
போதும் இனி நிறுத்து.

No comments:
Post a Comment