வட்டுடைத்த குருத்தொன்று
மெட்டமைத்துப் பாடுதே
தட்டி விட்டுத்தான் நடந்தால்
சட்டம் கூடச் சவக்குழியில்
லாபம் நஷ்டம் எதுவென்று
கட்டம் கட்ட தெரியவில்லை
பட்டாம்பூச்சி பறப்பதற்கு, இந்த
கொட்டாங்குச்சி தேவையில்லை
நிம்மதி கெடுக்கும் நிலைகேடு
நீரில் கரைந்து ஓடட்டும், இனி
நினைப்பது யாவும் நிறைவேறி
நின்மதி நிலவாய் மிளிரட்டும்
அன்பும் பண்பும் அரைநொடியில்
அடுப்பில் விழுந்து கருகட்டும்
அதுவே என்றும் சுகமென்றால்
அதையும் இதயம் ஏற்கட்டும்
இரண்டே இரண்டு விடையங்கள்
துண்டாய்ப் போன பின்னாலும்
பொன்வண்டாய் மாறி வலம்வந்து
ஒன்றாய் வாழ்ந்தும் பயனில்லை !
மெட்டமைத்துப் பாடுதே
தட்டி விட்டுத்தான் நடந்தால்
சட்டம் கூடச் சவக்குழியில்
லாபம் நஷ்டம் எதுவென்று
கட்டம் கட்ட தெரியவில்லை
பட்டாம்பூச்சி பறப்பதற்கு, இந்த
கொட்டாங்குச்சி தேவையில்லை
நிம்மதி கெடுக்கும் நிலைகேடு
நீரில் கரைந்து ஓடட்டும், இனி
நினைப்பது யாவும் நிறைவேறி
நின்மதி நிலவாய் மிளிரட்டும்
அன்பும் பண்பும் அரைநொடியில்
அடுப்பில் விழுந்து கருகட்டும்
அதுவே என்றும் சுகமென்றால்
அதையும் இதயம் ஏற்கட்டும்
இரண்டே இரண்டு விடையங்கள்
துண்டாய்ப் போன பின்னாலும்
பொன்வண்டாய் மாறி வலம்வந்து
ஒன்றாய் வாழ்ந்தும் பயனில்லை !

No comments:
Post a Comment