Monday, 12 March 2018

செவ்வானம் புடைசூழ
செவ்வந்திப்பூ நகைபூண்டு
தென்றலாய் எனை தழுவி
தென்மாங்கு இசைத்தவளே

சொந்தமாய் வந்தெனக்கு
சந்தமாய் தான் அமைந்து
பந்தமாய் ஒன்றிணைந்து
எந்தனை சூழ்ந்தவளே

பிரித்தெடுக்க முடியாத
பிரியமடி நான் உனக்கு
உரித்தெடுக்க முடியாத
உதிரமடி நீ எனக்கு.

No comments:

Post a Comment