Monday, 12 March 2018

நாகதாளிப்பழ மூக்கழகி
நாவல்ப்பழ உதட்டழகி

பேரீச்சம்பழ கண்ணழகி
பெருங்காய சொல்லழகி

மூன்றாம்பிறை புரவழகி
முக்கால தேன்சுவையழகி

பாவக்கொட்டை பல்லழகி
பல்லாங்குழி இடையழகி

வேப்பம்பழ நக அழகி
வெற்றிலை கை அழகி

செவ்வாழை தொடையழகி
செதுக்காத சிலையழகி

பனம்பழ கன்னமழகி
பணுவில் செவியழகி

பின்னாடி சதிரழகி
முன்னாடி புதிரழகி

இவள்தானோ பேரழகி
எனக்கேற்ற உலகழகி

கருவாச்சி நீயொன்றும்
கண்டபடி அழகில்லை

இருந்தாலும் என் மனசோ
சொன்னபடி கேட்குதில்லை !

No comments:

Post a Comment