தூரத்தில் இருப்பது தூய்மையாய் தெரிவதும்
பக்கத்தில் வந்ததும் துன்பமாய் இருப்பதும்
இந்தப் பாவி மனிதனின் பரிதாப மனநிலை
ஏறிமிதித்து நாம் எங்கே தான் சென்றாலும்
காவி உடுத்தவன் பின்னே நாம் போனாலும்
பாதி வழியிலே பைத்தியம் பிடிக்குதே
மாடிப்படிகளை எட்ட உதவிய ஏணிப்படிகளை
எட்டி உதைக்கிறோம் நாடித்துடிப்புக்கள் நாளை
அடங்கிடும் கூடி இருப்பது கோடி நன்மையே

No comments:
Post a Comment