கொக்காரே கொக்காரே கொஞ்சம்
என் கதை கேளு
கொத்தோடு என் மனதை கொய்து
சென்றது யார் கூறு
மச்சானை மணம் முடிக்க மாமி
எனை கேட்ட போதும்
பித்தாகி நிற்கின்றேனே வஞ்சி நான்
வழி தவறி
அக்கரையில் அவன் இருக்க இக்கரையில்
நான் இருந்து
மக்காகிப் போனகதை யாரிடம் தான்
நான் சொல்வேன்
இக்காலை வேளையிலே உன் அக்காளின்
தவிப்பை கண்டு
அக்காளையிடம் சென்று என் கொக்காரே
நீ சொல்வாயோ......?
என் கதை கேளு
கொத்தோடு என் மனதை கொய்து
சென்றது யார் கூறு
மச்சானை மணம் முடிக்க மாமி
எனை கேட்ட போதும்
பித்தாகி நிற்கின்றேனே வஞ்சி நான்
வழி தவறி
அக்கரையில் அவன் இருக்க இக்கரையில்
நான் இருந்து
மக்காகிப் போனகதை யாரிடம் தான்
நான் சொல்வேன்
இக்காலை வேளையிலே உன் அக்காளின்
தவிப்பை கண்டு
அக்காளையிடம் சென்று என் கொக்காரே
நீ சொல்வாயோ......?

No comments:
Post a Comment