Sunday, 30 August 2015

வர்ணிக்க முடியா வஞ்சியவள்



மான் இமைகள் மீன் விழிகள்
கோவைப்பழமாய் இதழ்கள்
மாங்கனிக்கன்னம் மல்லிப்பூ
புன்சிரிப்பு தேன்சிந்தும் பேச்சு
கொஞ்சும் மொழி பிஞ்சு மூச்சு
இன்னும் நான் என்ன சொல்ல
மொத்தத்தில் அவள் ஒரு......
கண்ணாடி போட்ட கயல் மீன்
புடவை கட்டிய புல்லாங்குழல்
பொட்டு வைத்த பொன்வண்டு
மொட்டு விட்ட பூச்செண்டு
பிரம்மன் படைத்த கற்கண்டு
காதல் கவிதைகள் பல தந்து, என்
நெஞ்சில் கொத்தும் கிளிக்குஞ்சு!

No comments:

Post a Comment