மாம்பழக் கன்னி ஒன்று மாதுளம்
கனி ஏந்தி தாவணி வீசுகின்றாள்
நான் தடுக்கி விழுகையில் தாமரை
மடிகொண்டு தாங்கிப் பிடிக்கிறாள்
பூவினில் இல்லாத தேன் சுவை நான்
உண்டு பூவை நீ யார் என்கின்றேன்
தாவணி கட்டிய தாமரை நானென்று
தத்தை தாகத்தைத் தூண்டுகிறாள்
கல்லிலே மோதிய கண்ணாடி போல்
அன்று மண்ணில் நான் கிடக்கிறேன்
தாலியை கட்டடா நான் தாரமாய்
ஒட்டிட என ஜாடையில் பேசுறாள்
கோடையில் மழை கண்ட காடையை
போல நான் தோகைவிரித்தாடுறேன்
மாரியில் வெயில் பட்ட மான்குட்டி
போல் என் மார்பினில் குதிக்கிறாள்
கார்த்திகை மாதத்து காந்தள் மலர்
ஒன்று எந்தன் கண் முன் நடக்குதே
ஆந்திரம் கொண்டவன் தூக்கமாத்திரை
போட்டது போல் மயங்கிக் கிடக்கின்றேன்.!

No comments:
Post a Comment