Wednesday, 14 January 2015

மலரும் நினைவுகளும் அன்றைய பாடல்களும்


மலரும் நினைவுகள் !!!


அக்கா வீட்ட போனேன் அரிசிப்பிட்டுத் தந்தா
...
வேண்டாம் என்று வந்தேன் வழிமுத்த பாம்பு

பாம்படிக்க தடிக்குப் போனேன் தடியெல்லாம்
தேன்

தேனெடுக்கச் சட்டிக்குப்போனேன் சட்டியெல்லாம்
ஊத்தை,

ஊத்தை கழுவத் தண்ணிக்கு போனேன் தண்ணி
எல்லாம் மீன்,

மீன் பிடிக்க வலைக்குப் போனேன் வலையெல்லாம்
பீத்தல்

பீத்தல் தைக்க ஊசிக்குப் போனேன் ஊசியெல்லாம்
வெள்ளி

வெள்ளியடி வெள்ளி புகையிலைக்காம்பு நுள்ளி
வாய்க்குள் போடடி கள்ளி .... !
 

No comments:

Post a Comment