Wednesday, 14 January 2015

தென்றல் சொன்னது அவள் திங்கள் என்று


தென்றல் என்னைத் தேடிவந்து செய்தி
ஒன்று சொன்னதே
திங்கள் முகம் பார்த்து வந்து செவியில்
தேனை வார்த்ததே
மாம்பழத்தை தழுவியதால் மயக்கத்தில்...
தள்ளாடுதே
மங்கை அவள் சுவாசத்திலே மூழ்கியதை
சொல்லுதே
தாமைரையை தழுவி வந்தேன் தங்கதிலே
உரசி வந்தேன்
பொய்கையிலே மிதந்து சென்றேன் பூக்களிலே
புரண்டு கெண்டேன்
நாதத்திலே இசைந்து நின்றேன் கீதத்திலே
அசைந்து கொள்வேன்
இவை எல்லாம் தொட்டு வந்து இன்பம் இனி
இல்லை என்றேன்
இருக்கையிலே படுக்கை போட்டு தலைசாய்க்க
நான் சென்றேன்
மங்கை அவள் மேனி பட்டு அங்கேயே மயக்கமிட்டு
மடையன் நான் என்றுணர்ந்தேன்..

தென்றல் சொன்ன செய்தி இது என்றோ நான்
அறிந்த உண்மை அது ...!
 

No comments:

Post a Comment