உண்மை இங்கே முக்காடு போட்டு
முடங்கிக் கிடக்குது
பொய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லாக்கில் சுற்றுது
தீமை மட்டும் தீயைப்போலே தினம் ...
தீண்டிக்கொள்ளுது
அன்பு ஏனோ அடுப்பில் வெந்து காற்றில்
கரைந்து போகுது
உறவுகள் எல்லாம் உதட்டில் மட்டும்
ஊஞ்சல் ஆடுது
உரிமை என்று சொல்லிச் சொல்லி பல
உயிர்கள் போகுது
நாளைய உலகம் என்னவாகுமோ என
மனசுது ஏங்குது
நல்லதை சொன்னால் நாத்திகன் என்றே
சாயம் பூசுது
நல்லதும் கெட்டதும் சாமியின் கணக்கென்று
ஆத்திகம் சொல்லுது
இப்படியே எல்லாத்துக்கும் சாட்டுச் சொல்லி
சாட்டுச் சொல்லியே எங்கள் வாழ்க்கை ஓடுது !!!
முடங்கிக் கிடக்குது
பொய்கள் மட்டும் பரிவட்டம் கட்டி
பல்லாக்கில் சுற்றுது
தீமை மட்டும் தீயைப்போலே தினம் ...
தீண்டிக்கொள்ளுது
அன்பு ஏனோ அடுப்பில் வெந்து காற்றில்
கரைந்து போகுது
உறவுகள் எல்லாம் உதட்டில் மட்டும்
ஊஞ்சல் ஆடுது
உரிமை என்று சொல்லிச் சொல்லி பல
உயிர்கள் போகுது
நாளைய உலகம் என்னவாகுமோ என
மனசுது ஏங்குது
நல்லதை சொன்னால் நாத்திகன் என்றே
சாயம் பூசுது
நல்லதும் கெட்டதும் சாமியின் கணக்கென்று
ஆத்திகம் சொல்லுது
இப்படியே எல்லாத்துக்கும் சாட்டுச் சொல்லி
சாட்டுச் சொல்லியே எங்கள் வாழ்க்கை ஓடுது !!!

No comments:
Post a Comment