Wednesday, 14 January 2015

கனவை கெடுத்த வெள்ளைக்கிழவி


மழையில் நனைந்த போதும் குளிரில்
நடுங்கவில்லை
காரணம் என்ன வென்று கண்விழித்துப்
பார்க்கின்றேன்
என்னவள் போர்வையாகி தீ முத்தங்கள்...
கொடுக்கின்றாள்
இறைக்கைகள் ஏதுமின்றி நான் வானத்தில்
பறந்துகொண்டிருந்தேன்
ஐயஹோ அந்தநேரம் பார்த்து அழைப்பு மணி
அடிக்கக் கேட்டு
திடுக்கிட்டு நான் எழுந்து கதவைத் திறந்து
பார்க்கின்றேன்
கடவுளை நினைத்தால் உனக்கு கவலைகள்
ஏதுமில்லை எனும்
விளம்பரத் தாழ்களோடு வெள்ளைக்காரப்
பாட்டி ஒன்று
குடிகெடுத்த கிழவி என்று கோபத்தையும்
அடக்கிக்கொண்டு
ஓடிப்போய் தூங்கிவிட்டேன் என்னவளை
காணவில்லை
என்னதான் ஆச்சுதென்று நான் தூக்கத்திலே
ஏங்கித்தவிக்க
விடிந்தால் வெள்ளிக்கிழமை நான் விரதமடா
என்னவனே
உனக்கு சைவம் பிடிக்காதேடா என சொல்லிச்
சிரித்தாள் தள்ளி நின்று
அடப்பாவி அங்கேயும் நீயாடா ஆண்டாவா....?
 

No comments:

Post a Comment