Wednesday, 14 January 2015

நான் காணும் கனவுலகம்


உழைக்கும் மனிதன் உயர வேண்டும்
உரிமை எல்லாம் கிடைக்க வேண்டும்
பசிக்கும் வயிறு நிறைய வேண்டும்
பச்சைப்பிள்ளை சிரிக்க வேண்டும்
பாலில் விழுந்து குளிக்க வேண்டும்...
தந்தை அசந்து உறங்க வேண்டும்
தாயின் கனவுகள் மலர வேண்டும்
இப்படி ஒரு உலகம் வேண்டும் என்று
எல்லா உயிரும் நினைக்க வேண்டும்

No comments:

Post a Comment