Thursday, 29 January 2015

முடியாது என்றால் முயற்சிக்காதே


முடியாது முடியாது என்று முணுமுணுக்காதே
முடிய முன் அதன் முடிவை நீ எடுக்காதே
எனக்குத் தெரியாது தெரியாது என நடிக்காதே
கொஞ்சம் தெரிந்ததும் பருப்பாட்டம் குலைக்காதே
கிடைக்காது கிடைக்காது என எண்ணி நடக்காதே...
நடக்கின்ற வழியிலேயே முடங்கிக் கிடக்காதே
சிறகுகள் இல்லாமல் பறந்திடத்தான் நினைக்காதே
பறந்தால் நீ கிழே விழுவாய் என்றால் முறைக்காதே
என்னடா இப்படி சொல்லுறான் என்று சிரிக்காதே
சிரித்து சிரித்து ஒருநாள் கஞ்சிக்கும் வழியில்லாமல்
தவிப்பாய் என்பதை மட்டும் மகனே மறக்காதே.....!!!
 

No comments:

Post a Comment