Wednesday, 14 January 2015

கண்ணீர் தெளிக்கும் பன்னீர்


ஹா ஹா ஹா எனச் சிரித்தேன்
ஆஹா ஆஹா கவிதை கவிதை
இதுவே கவிதை என்றாய் அன்று
ம் ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்
என்று பலர் கருத்தும் சொன்னார்கள்...
ஓஹோ ஓஹோ அதுதான் அதுதான்
என பதில்கள் சொல்லி மகிழ்ந்தேன்
இன்று ஓஓ ஓஒ என்று அழுகின்றேன்
நீயோ ஹா ஹா எனச் சிரிக்கின்றாய்
பச்சைப்பிள்ளையில் பச்சைமிளகாய்
கடித்தும் இவ்வாறு கலங்காத கண்கள்
பாசத்தை குடித்ததினால் கலங்கின்றதடி
இப்போது நீ என்னை கண்ணீர் வடித்து
வாழவிட்டாலும் உனை என்றும் நான்
பன்னீர் தெளித்து வாழ்த்திடுவேனே.....!
 

No comments:

Post a Comment