Thursday, 29 January 2015

விடியாத பொழுதொன்று கிடையாது


நனைத்து நனைத்து சுமக்கின்றோம்
காய முன்னே மடிக்கின்றோம்
விடிவைத் தேடித் தேடி ஓடுகின்றோம்
விடிய முன்னே வாடுகின்றோம்
வடிந்து ஓடும் கண்ணீரில் உன் வறுமை...
கரைந்து ஓடப் போவதில்லை
விடிந்து விடிந்து மறைகின்ற பொழுதை
எண்ணி நடைபோடு
விழுந்து விழுந்து எழுந்தாலும் நம்பிக்கை
கொழுந்தை கிள்ளி எறியாதே
உழுத்துப் போன சிலர் கதை கேட்டு நீயோ
பழுத்த இலைபோல் வாடாதே
சுவைத்து வீசிய மாங்கொட்டை கூட மண்ணில்
விழுந்து முளைக்கும் மறவாதே..!
 

No comments:

Post a Comment