நான் தேன் குடித்து வளரவில்லை
தமிழ் பால் குடித்து வளர்ந்தேன்
முழுமையாக குடிக்க முடியாமல்
என் ஊரையும் தாயையும் விட்டு
இங்கு தனியாக வந்தேன் ஆனால் ...
என் தமிழை விட்டு வரவில்லை
கோதாரியின் சேதாரத்தை நான்
மேதாவிகளிடம் கற்கவில்லை
என் பூட்டன் பாட்டனிடம் கற்றேன்
குங்குமப்பூவை நான் பாலில் கலக்கி
சந்தன நிறம் பெற குடித்தவனில்லை
நன்னாரி வேரை பிடுங்கி தேநீரில்
கலக்கிக் குடித்து வளர்ந்தவன்
பொன்னால் செய்த தொட்டிலில்
படுத்து உறங்கியவன் இல்லை நான்
பொன்னாங்காணி மேல் தவழ்ந்தவன்
எனக்குப் புளியம்பழம் பிடிக்காது ஏன்
என்றால் அது கனிந்ததும் தன் கோதோடு
ஒட்டி உறாவாடுவதில்லை என்பதால்..... !
தமிழ் பால் குடித்து வளர்ந்தேன்
முழுமையாக குடிக்க முடியாமல்
என் ஊரையும் தாயையும் விட்டு
இங்கு தனியாக வந்தேன் ஆனால் ...
என் தமிழை விட்டு வரவில்லை
கோதாரியின் சேதாரத்தை நான்
மேதாவிகளிடம் கற்கவில்லை
என் பூட்டன் பாட்டனிடம் கற்றேன்
குங்குமப்பூவை நான் பாலில் கலக்கி
சந்தன நிறம் பெற குடித்தவனில்லை
நன்னாரி வேரை பிடுங்கி தேநீரில்
கலக்கிக் குடித்து வளர்ந்தவன்
பொன்னால் செய்த தொட்டிலில்
படுத்து உறங்கியவன் இல்லை நான்
பொன்னாங்காணி மேல் தவழ்ந்தவன்
எனக்குப் புளியம்பழம் பிடிக்காது ஏன்
என்றால் அது கனிந்ததும் தன் கோதோடு
ஒட்டி உறாவாடுவதில்லை என்பதால்..... !

No comments:
Post a Comment