Monday, 12 January 2015

பொறுமையும் பெரும் ஆயுதமே


திடுக்கிடும் தகவல்கள் தினம் தினம் நடக்குது
தடுத்திட முடியாமல் ஒரு இனம் தவிக்குது
துடிக்கின்ற நெஞ்சங்கள் படுக்கையில் கிடக்குது
நடிக்கின்ற வஞ்சகர்கள் கொடிகட்டிப் பறக்குது
இருக்கின்ற இடத்திலே படுக்கைகள் விரித்திட...
மறுத்திடும் கொடுமையை யாரிடம் சொல்லிட
பொறுமையாய் இருப்பவன் பொறுப்பில்லை
என்றில்லை பெருமையை காத்திட பொறுமையும்
ஆயுதமே இதை புரிந்து கொள்ளடா மானிடனே !!!
 

No comments:

Post a Comment