அடிபட்ட ஒருவன் வலியில் துடிப்பதைக்கண்டு
குடிகெட்ட ஒருவன் கோயிலுக்குச் சென்று
முறைகெட்ட வழியில் வணங்கினான் என்று
தடைபோட்ட ஒருவன் செய்தியை சொல்ல
கண்கெட்ட ஒருவன் அதை காதினில் கேட்டு...
பண்பட்ட ஒருவன் சபையென எண்ணிச்சென்று
தென்பட்ட விடையத்தை அவனிடம் செப்ப, அங்கே
தரம்கெட்ட மனிதர்களின் நகைப்பினைக் கண்டு
புண்பட்ட நெஞ்சோடு ஒருவன் சொன்னான் வந்து..!!!
குடிகெட்ட ஒருவன் கோயிலுக்குச் சென்று
முறைகெட்ட வழியில் வணங்கினான் என்று
தடைபோட்ட ஒருவன் செய்தியை சொல்ல
கண்கெட்ட ஒருவன் அதை காதினில் கேட்டு...
பண்பட்ட ஒருவன் சபையென எண்ணிச்சென்று
தென்பட்ட விடையத்தை அவனிடம் செப்ப, அங்கே
தரம்கெட்ட மனிதர்களின் நகைப்பினைக் கண்டு
புண்பட்ட நெஞ்சோடு ஒருவன் சொன்னான் வந்து..!!!

No comments:
Post a Comment