Thursday, 29 January 2015

என் உதயமும் இதயமும் நீ அல்லவா


நான் கனக்கக் கனக்க சுமக்கின்றேன்
சுமையின் சுகத்தை ரசிக்கின்றேன்
வலிக்கும் போதும் சிரிக்கின்றேன்
சிரிப்பில் வலியை ருசிக்கின்றேன்
நான் களைத்துப்போன வேளையிலும் ...
உனை இறக்கிவைக்கப் போவதில்லை
ஆனால் நீ குதித்து ஓட நினைத்தாய்
என்றால் குதிக்கும்போது உன் கால்கள்
வலிக்கும் என்பதற்காக உனை கீழே
இறக்கிவிட நான் மறுக்கவில்லை...!

No comments:

Post a Comment