Wednesday, 14 January 2015

அறிவு கெட்ட ஆட்டுக்குட்டி


ஓநாய் எல்லாம் ஒன்று சேர்ந்து
ஆட்டுக்குட்டியை வாழ்த்துதடா
உண்மை அறியா ஆட்டுக்குட்டி
ஆனந்தத்தில் துள்ளுதடா
...
வெளுத்ததெல்லாம் பால் என்று
தடுத்த போதும் கேட்காமல் வாய்
நுரைக்கக் குடிக்குதடா

பாசம் உள்ள கழுதை ஒன்று மோசம்
போகும் நிலையைக் கண்டு கோஷம்
போடத் தவிக்கின்றது ஓசை புரியா
நாசம் போகும் குட்டி காதுகளில்....

புரிந்தவர்களுக்கு இது புரியட்டும் புரியாத
நபர்களுக்கு இதுவும் கடந்து போகட்டும்
 

No comments:

Post a Comment