Saturday, 25 August 2012

நானே அவளை தூண்டிவிட்டேன் ! ***



சும்மா இருந்தவளை நான் தூண்டி விட்டுபுட்டென்
தூண்டிலில் மீனாக நானே மாட்டிக்கிட்டென்
என்ன என்னன்னு கேட்டு நின்றவளை, அன்றே
சும்மா சும்மான்னு சொல்லி முடிக்காமல்
கண்ணே கண்ணே உன் காதை கொடுவென்று
கன்னா பின்னான்னு கதைகள் தான் சொல்லி்
இன்று சின்னா பின்னான்னு ஆட்டிபடைக்கின்றாள்
ஐயோ ஐயோன்னு நான் அலறித் துடித்தாலும்
பொய்யே பொய்யேன்னு கள்ளி நகைக்கின்றாள்

கண்ணா கண்ணா நீதான் என் மன்னா மன்னா
என்று அன்பை மொத்தமாய் கிள்ளி முத்தமாய்
தெளிக்கின்றாள், என் பிள்ளை நீ என்று மெல்ல
அள்ளி அனைக்கின்றாள் துள்ளி மகிழ்கின்றாள்...!!!

1 comment:

  1. சும்மா இருந்தவளை நான் தூண்டி விட்டுபுட்டென்
    தூண்டிலில் மீனாக நானே மாட்டிக்கிட்டென்
    என்ன என்னன்னு கேட்டு நின்றவளை, அன்றே
    சும்மா சும்மான்னு சொல்லி முடிக்காமல் ......பறவாய் இல்லை kk அன்பு தானே அன்பு காட்டுபவங்களை அணைத்தே வைத்துக்கொள்ளுங்கள் கவிதை தூண்டிலுல் சிக்கிய மீனாக

    ReplyDelete