Tuesday, 7 April 2015

செதுக்காத சிலை கிறுக்காத கவிதை அவள்


மாலைக் கருக்கல் வேளையிலே
மான்கள் துள்ளும் சோலையிலே
மயில் போலே மங்கை ஒன்றை
மனக்கண்ணால் நான் பார்த்தேன்


செதுக்காத சிலையாக
நறுக்காக நின்ற அவள்
கிறுக்காத கவிதை போல்
சறுக்காது எனை ஈர்த்தாள்

மோகத்தில் நான் மூழ்கி
தாகத்தில் தவிக்கயிலே
கட்டுடலைத் தான் அசைத்து
மொட்டிதழை விரித்தாளே

அம்பொன்று பாய்ந்து வந்து
அடிமனதில் துழைத்தது போல்
ஐம்புலனும் படபடத்து,,, நான்,
அங்கேயே சாய்ந்தேனே

தென்றல் போல் வந்த அவள்
தேகத்தை தழுவியதால்
தேனி போல் நான் மாறி
பூவைக்குள் மறைந்தேனே !!!
 

No comments:

Post a Comment