Tuesday, 7 April 2015

மனிதனை அறிய மனிதனால் முடியவில்லை

மனிதர்களை புரிந்து கொள்ள நீ
மனிதனாக இருந்து கொண்டு
வருந்துவதில் பயன் இல்லை

மிருகமாக மாறி நீயும் மனிதரோடு...
கலந்து கொண்டு அறிந்து கொள்ளும்
வேளையிலே வருந்திடுவாய் மனிதனாக

தேடி வந்த உறவுகூட இறக்கை நன்கு
முளைத்த பின்னே உன்னை விட்டுப்
பறந்து செல்லும் மறந்திடாதே

அப்போ விழிகள் கலங்கி நீரைச் சிந்தும்
அதை துடைக்க அன்று யாருமின்றித்
தவிக்கும் போது உணர்ந்து கொள்வாய்
மனிதர்களின் மகத்துவத்தை

பெற்றவர் போல் என்றும் மற்றவர் இல்லை
உத்தமர் என்று இங்கே யாருமே இல்லை
தத்துவம் சொல்ல நான் வித்தகன் இல்லை
சத்தமாய்சொல்வதால் உண்மையும் இல்லை

என் மனதினில் பட்டதை நான் மறைக்காமல்
சொல்கின்றேன் கவிதை என்று நீ கணக்குப்
போடாமல் உன் இதயத்தை தொட்டிட்டால்
எழுதிடு கருத்து நீ.....................!!

No comments:

Post a Comment