Saturday, 5 November 2016

சதி வேரூண்டி சாதியானது


நாய்களின் கூடாரம்,.அங்கே
நியாயங்கள் வியாபாரம்
நாணயச் சூதாட்டம்,.அதில்
நயவர்கள் வாலாட்டம்

சாதியின் வேரோட்டம்,.இங்கே
தரம்கெட்ட நரிக்கூட்டம்
கோவிலில் தேரோட்டம்,.அங்கும்
தேவாங்கு நடமாட்டம்

அர்ச்சனை அபிசேகம்,. அங்கே
ஆண்டவனை காணோம்
ஆலய வழிபாடு,. இங்கேயோ
ஆந்தைகள் பலநூறு

மனிதர்கள் எனும் பேரில்,.சில
மந்தைகள் வித்தையாலம்
சுவாசிக்க சுதந்திரம் இல்லை
இருந்தும் தீண்டாமை தின்னுதே நம்மை

காட்டிலே நீ கிடந்து சொன்ன
உன் வார்த்தைகள் என்னாச்சு
நாட்டுக்குள் வந்ததுமே உந்தன்
நாணயம் மண்ணாச்சு

உயிர் காக்க உனை அணைத்து
உணவிட்ட வேளையிலே
உறவென்று நீ சொன்ன
கதையெல்லாம் பொய்யாச்சு

ஒரு சட்டி பானையிலே பொங்கி
ஊரெல்லாம் சேர்ந்துண்டு,.இனி
வேற்றுமை இல்லாத ஒற்றுமை
நாமென்று சொன்னது நகைச்சுவயாச்சு

ஒட்டிப்பிழைத்த ஓநாய்கள் கூட்டம்
இப்போ முட்டி மோதி எட்டி நின்று
தட்டி விடுகுதே, அதை கட்டித்தழுவி
ஒரு கூட்டம் கைதட்டிக்கொள்ளுதே

தீண்டாமை உனக்கு உயர்வென்று
அன்று நீயெனை தீண்டாதிருந்திருந்தால்,
இன்று படிதாண்டாது நானிருந்து
உன்கூட தேவாரம் பாடமாட்டேன்

நம்மை விட நாய்கள் இனம்
மேன்மைதானடா அவை நக்கி
தின்றும் உன்னை போல் நன்றி
கெட்ட ஜீவன் இல்லடா.

No comments:

Post a Comment