Friday, 29 April 2016

எந்தனை ஆளும் மந்தார நிலவு

சிந்தையில் புகுந்து எந்தனை
ஆளும் மந்தார நிலவே உன்
விந்தையில் நனைந்து சொந்தமான
காளையும் நானே

மல்கோவா மாம்பழக் கன்னங்கள்
கொண்டு மல்லிகை மொட்டென
புன்னகை சிந்தி மாதுளம் கனிகளை
வெண்மேனியில் தாங்கி

செவ்வாழைத்தண்டிடை தேனடை
ஒழித்து கவிக்குயிலாய் கூவும்
புல்லாங்குழலொன்று கிளியாய்ச்
சிணுங்கி தேன்மொழிபேசி

தேகத்தைவளைத்து மோகனம்வடித்து
தாகத்தில் கொதித்து வேகத்தை தூண்டிட
நான் தலைகால் புரியாமல் தடுமாறித்
தடுக்கி விழுந்தேன் தலைசுற்றி !


No comments:

Post a Comment