சிலை போலே நிற்கிறாய்
பல வேளை தலை கூனி
மடல்வாழை விரிக்கிறாய்
தொலை தூரம் நீயென்று
தொலைந்து ஏன் போகிறாய்
கலை தீபம் நானென்று
விழி நீரில் எரிகிறாய்
அலைபேசி ஊடாக நீயோ
அழைப்பிதழ் அனுப்புகிறாய்
அலங்காரப் பொருளென்று
விலை பேசி விற்கிறாய்
விலை என்ன நான் கேட்டு
இருகரங்கள் நீட்டுறேன்
விதி சொல்லும் விலையெதுவோ
என் கதி அதுவே என்கிறாய்!
தொலைந்து ஏன் போகிறாய்
கலை தீபம் நானென்று
விழி நீரில் எரிகிறாய்
அலைபேசி ஊடாக நீயோ
அழைப்பிதழ் அனுப்புகிறாய்
அலங்காரப் பொருளென்று
விலை பேசி விற்கிறாய்
விலை என்ன நான் கேட்டு
இருகரங்கள் நீட்டுறேன்
விதி சொல்லும் விலையெதுவோ
என் கதி அதுவே என்கிறாய்!

No comments:
Post a Comment