குலத்தின் பெருமை
கழுத்தை அறுத்து
இனத்தின் இளிவை
தலையில் சுமந்து
கொழுத்த மடையர்
இடத்தில் பிறந்து
பகட்டை வாழ்வில்
தினமும் வளர்ந்து
சுரத்தை கெட்ட
மனிதர்கள் காட்டில்
பலத்தை இழந்த
மறவர்கள் நாமே..!
பிணத்தை விற்று
பிழைப்பு நடத்தி
இனத்தை அழித்து
இரையாய் உண்டு..
தவிச்ச வாய்க்கு
தண்ணீர் கொடுக்கா
மரத்துப் போன
மந்தைகள் மத்தியில்
தமிழே நீ இன்று
தமிழ் நாட்டிலே
தலை குனிந்தால்
நாம் தமிழரா..???
இடத்தில் பிறந்து
பகட்டை வாழ்வில்
தினமும் வளர்ந்து
சுரத்தை கெட்ட
மனிதர்கள் காட்டில்
பலத்தை இழந்த
மறவர்கள் நாமே..!
பிணத்தை விற்று
பிழைப்பு நடத்தி
இனத்தை அழித்து
இரையாய் உண்டு..
தவிச்ச வாய்க்கு
தண்ணீர் கொடுக்கா
மரத்துப் போன
மந்தைகள் மத்தியில்
தமிழே நீ இன்று
தமிழ் நாட்டிலே
தலை குனிந்தால்
நாம் தமிழரா..???

No comments:
Post a Comment