Tuesday, 5 April 2016

நவீனம் தராத நவரசம் நீயடி




எந்த மடிக்கணினியிலும்
நான் காணாத வர்க்கம்
உந்தன் மடிக்கணைக்குள்
கண்டேன் என்ன மர்மம்

எந்த அலைவரிசையிலும்
இல்லாத வண்ணம்
உந்தன் தலைகோதலில்
கிடைப்பதாக எண்ணம்

எந்த இணையத்தளத்திலும்
மிதந்திடாத மார்க்கம்
உந்தன் இதயக்குளத்துக்குள்
நீந்துவதே தருக்கம்

எந்த நவின கைபேசியிலும்
பெற்றிடாத இன்பம்
உந்தன் குஞ்சுக் கைராசியில்
பெறுவதே அமுதம் !

No comments:

Post a Comment